Paramacharya

Paramacharya

ஊத்துக்காடு சிவன் கோவில்

ஊத்துக்காடு சிவன் கோவில்

அமைவிடம் கோயிலூர் நகரமாக விளங்கும் காஞ்சியின் கிழக்கு பகுதியில் சுமார் 15 மயில் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்பூதிலிருந்து வாலாஜாபாத்துக்கு செல்லும் சாலையில் வாலாஜாபாதிலிருந்து சுமார் 3 கல் தொலைவில் ஊத்துக்காடு என்கின்ற சிற்றூர் அமைந்துள்ளது.

கோவிலின் பழமையும் கல்வெட்டுக்கள் சான்றும் சுமார் 1200 வருடங்களுக்கு முன்பு பல்லவ வேந்தர்கள் தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை 18 கோட்டங்களாக பகுத்தனர். அவற்றுள் ஊத்துக்காடும் ஒரு கோட்டமாக விளங்கியது. இவ்வூத்துக்காடு கோட்டத்தில், பல்லவ மன்னர்களின் கலை நுட்ப கோயில்களில் இச்சிவ ஆலயமும் ஒன்றாகும். இதற்க்கு உண்டான கல்வெட்டு சான்றில், இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பவர்மன் மன்னரால் கட்டப்பட்டது ஆகும். கம்பவர்மன், கோயில் சிவகார்யம் செய்து வந்த திருநாமக்கிழவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.இக்கோயிலில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் மூன்று பெரிய நந்தா விளக்குகள் ஏற்றி அவை அர்த்த சாமம் வரை எரிவிக்க செய்பவர்களுக்கு பொன்னும் பொருளும் நிலமும் வழங்கினார். அப்படி வழங்கிய நிலத்துக்கு திருநாமக்காணி என்று பெயர். இது கல்வெட்டு சான்றாகும்.

இக்கோயில்நந்தி மண்டபம், மஹா மண்டபம், அர்தமண்டபம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி, சண்டிகேஸ்வரரின் சன்னதி, மிகப்பெரிய விமானமும், கலை நுட்பங்களுடன் கூடிய அழகிய தூண்களும், மணிமண்டபமும் தன்னகத்தே கொண்டு ஒரு பெரிய கோவிலாக விளங்கியிருக்கிறது.

இன்றைய நிலை
இவ்வாறு எழில் மிகுந்து இருந்த இத்திருத்தலம் சிதிலமடைந்து இறைவன் திருமேனி மண்ணில் மறைந்து இருந்தது. ஒரு நாள் 1.08.08 அன்று விளையாடி கொண்டு இருந்த விடலைகளின் நெஞ்சில் ஈசன் ஊன்றி அவர்கள் மூலமாக மண்ணில் இருந்து இறைவன் திருமேனி கண்டறியப்பட்டது. இவை அனைத்தும் ஈசன் சித்தமாகும்.

Monday, January 4, 2010

ஊத்துக்காடு சிவன் கோயிலின் பழைய நிலை

புனருத்தாரணம்: திருப்பணி: மகான்கள் வாக்கு:

ஒருவன் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடத்தில் நிபுணரான ஒருவரிடம் சென்றான். அந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு மறுநாள் வரச்சொல்லி விட்டார். இவன் வீடு திரும்பும் பொழுது மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது, ஒரு பாழடைந்த கோயிலில் ஒதுங்கிக்கொண்டான்.அங்கு நின்றிருந்த நேரம் முழுவதும் அவன் மனதில் அந்த கோயிலின் பரிதாபமான நிலை பற்றியும் தன்னிடம் பணம் பொருள் இருந்தால் அந்த கோயிலை எப்படி எல்லாம் சீரமைக்கலாம் என்ற எண்ணமாகவே இருந்தான். மழை நின்றவுடன் வீட்டிற்கு சென்று விட்டான்.அந்த பெரியவர் சொன்னது போல் மறுநாள் அவரைப்பார்க்க சென்றான். அவனைக் கண்டவுடன் பெரியவருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனென்றால் முந்தைய நாள் அவன் ஜாதகத்தை பார்த்த அவர் அவன் ஆயுசு அன்றுடன் முடுவடைந்து விடும் என்று ஜாதகம் கூறியதால் அவனிடம் அந்த செய்தியை கூறாமல் மறுநாள் வரச் சொல்லி விட்டார்.அவன் முந்தைய நாள் அங்கிருந்து சென்றதிலிருந்து இப்பொழுதுவரை என்னவெல்லாம் நடந்தது என்று வினவ, அவனும் நடந்ததை கூறினான். அதற்க்கு அவர் உனக்கு கடவுள் கிருபை மிகுதியாக உள்ளது ஆகவே நீ திருப்பணி செய்யவேண்டும் என்று மனதால் நினைத்ததற்கே உன் வாழ்நாள் கூடிவிட்டது, நீ திருப்பணி கைங்கர்யத்தில் பணமாகவும், பொருளாகவும், உடலாலும் கொடுத்து ஈடுபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் என்று கூறினார்.